Tamil

கர்னாடக இசையின் நுழைவாயில் இசைக்கு ஏது எல்லை

இசையில் மனம் இசையும். ஆம்ää முறையாக இசைக்கப்படும்போது கேட்பவர் எவரையும் தன்வயப்படுத்தும் சக்திமிக்கது இசை.

சிலப்பதிகாரகூற்றுப்படி பாணர்களுக்கிiடையே இலக்கணஇசைப்போட்டி ஸ்வரபேதத்தில்கூட நடைபெற்றிருக்கின்றது. அப்போதெல்லாம் மனோதர்மம் நிறைய பிரயோகிக்கப்படும். ஸ்வரக்கட்டுப்பாட்டுக்குள்நின்றுகொண்டு தான் எடுத்துக்கொண்ட பாடலின் மெட்டை விரிவுபடுத்தி அழகுபடுத்தி வித்தியாசமான சங்கதிகளை வெளிக்கொணர்தல் மனோதர்ம வித்துவம் என கொள்ளப்பட்டது. இப்படி எம்மவர்கள் இலக்கண இசையிலே புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டிருந்த வேளையில் இந்தியாவுக்குள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய மொகலாயர்கள் எமது இலக்கண இசையைகண்டு வியந்துää தமது நாட்டு இசைவிற்பன்னர்களை அழைத்து எமது இசையைபயின்றுää தமக்கும் அப்படியொரு இசைவடிவத்தை உருவாக்கும்படி மொகலாய மன்னன் கட்டளையிட்டதால் பிறந்ததுதான் ஹிந்துஸ்தானி இசை. ஆக பல நுட்பங்கள் நிறைந்த இசை இருந்த நாட்டிலேயே இன்னோர் இசைவடிவம் உருவாக்கம் பெற்றிருக்கிறது. பாரசீக இசைக்கும் ஹிந்துஸ்தானி இசைக்கும் இடைப்பட்டோரால் உருவாக்கப்பட்ட இசை ஹசல் ஆக தற்போதைய பாகிஸ்தானில் நிலைத்திருக்கிறது.

உலகில் ஒவ்வொரு இனத்திற்கும் பாரம்பரியமான கலைவடிவங்கள் இருக்கின்றது. அதேபோல் அவர்களுக்கான இசை வடிவங்களும் இருக்கின்றன. எந்த இசையுமே ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்குகின்றது. ஆனால் இசையை வெளிப்படுத்தும் முறைதான் மாறுகின்றது. பு@ஸ்ää ஜாஸ்ää கன்ற்ரி என எகப்பட்ட இசை வடிவங்கள் கர்னாடக இசைக்குப் பிற்பாடு தோற்றுவிக்கப் பட்டவைதான். சிங்களத்தின் தேசியநடனம் கேரளத்து கதகளியின் மறுவடிவமே. இசையிலும் அவர்கள்தமக்கென ஓர் பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கின்றார்கள். பல இசைவடிவங்கள் அவ்வப்போது அங்கீகரிக்கப்பட்டே வந்திருக்கின்றது. சில வருடங்களுக்கு முன்னர்தான் ஆபிரிக்க இசைவடிவமான றாப் அறிமுகமானது. ஆனால் அறிமுகமான உடனேயே பிரபல்யமாகி உலகிலேயே நுண்மையான இசையை தன்னகத்தேகொண்ட தென்னிந்தியாவையே தனக்கு அடிமையாக்கிவிட்டதே.

சாஸ்திரிய இசையை புரிவதற்கு முதிர்ச்சி தேவை. அம் முதிர்ச்சியை பெற அனுபவம் தேவை. அந்த அனுபவத்தை பெறும் நுழைவாயிலாக ஹிந்துஸ்தானிக்கு ஹசல் இருப்பதுபோல எமக்கும் ஓர் வடிவம் தேவை
என எண்ணினோம். சாஸ்திரியத்துக்குள் நின்றுகொண்டு சாதாரண இசைஆவலர்களையும் கவரும் வண்ணம் இசைக்கமுடியாதா? தெம்மாங்கு இசைக்கும் இலக்கண இசைக்கும் பாலமமைக்க முடியாதா? இன்னும் ஈழத்தவர்கள் வேற்றவரின் இசையிடம் அடிமைப்பட்டிருக்கின்றார்களே அதிலிருந்து விடுதலை பெறமுடியாதா? எமக்கென்றோர் இசைவடிவம் தோற்றுவிக்கப் படக்கூடாதா? என ஒருசிலர் எண்ணியதன் விளைவுதான் இசையரங்கம். உலகிற்கே இசையிலக்கணத்தை உருவாக்கிக்கொடுத்த எங்கள் இசைக்குள் அடங்கியிருக்கும் அற்புதமான வி~யங்களை எம்மவர் புரிந்து கொள்ளவழிமுறைகள் சமைக்கவேண்டும்என்கின்ற இலட்சியம் இசையரங்கத்திடம் உண்டு. மெல்லிசை ரசிகர்களின் கரம்பற்றி மெல்ல அழைத்துவந்து சாஸ்திரிய நதியில் நீராடவைக்கும் நோக்கில் நாம் ஆரம்பித்திருந்தாலும் எமது முயற்சி ஏற்படுத்திய தாக்கம் எமக்கென ஓர் இசைவடிவத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றது. எமது நாளாந்த வாழ்வின் இன்ப துன்பங்களை எளிமையான வரிகளுடன் பாடும்போது எடுத்துக்கொண்ட ராகத்திலிருந்து விலகாமல் பாடகனின் உணர்வுகளின் பிரதிபலிப்பாக வெளிப்படுவதே இசையரங்கத்தின் படைப்புக்கள்.

கலையால் கலைஞன் வாழும் நிலை வரும்போதுதான் கலை வளரும் என்கின்ற கோட்பாட்டை இசையரங்கம் மதிக்கின்றது. இத்தேவைகளை நிறைவேற்ற இசையரங்கம் எடுத்த செயற்பாடுதான் இசைக்கு ஏது எல்லை என்கின்ற நிகழ்ச்சி. மிகவும் வித்தியாசமான இன்னிசை நிகழ்ச்சி. எமக்கான இசைவடிவம் ஒன்றை தோற்றுவிக்கும் முயற்சி.

திருப்தியடைந்தவனிடம் தேடலிருக்காது. தேடலுள்ளவன் சம்பிரதாயம் சடங்குகளை ஏற்றுக்கொள்ளமாட்டான்.